பாகிஸ்தானை வீழ்த்தி U-19 ஆசியக் கோப்பையை வென்ற இந்தியா.. திக் திக் நிமிடங்கள்!

India U19 Asia Cup Champions: பாகிஸ்தானை வீழ்த்தி U-19 ஆசியக் கோப்பையை மீண்டும் வென்றது இந்தியா!

Published on: November 15, 2026 at 1:47 pm

Updated on: November 15, 2026 at 1:49 pm

மஸ்கட், நவ.15, 2026: ஓமனில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. அந்த அணியின் உஸ்மான் கான் 107 ரன்களும், அப்துல் காதிர் 80 ரன்களும், கேப்டன் பர்ஹான் யூசுப் 63 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் காவ்யா படேல் 4 விக்கெட்டுகளையும், சி. வெங்கடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் லக்ஷ்யா ராய்சந்தானி 80 ரன்களும், ஆர்யவீர் சேவாக் 58 ரன்களும் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்தனர். இருப்பினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் இந்திய அணி நெருக்கடியில் சிக்கியது.

இறுதிக்கட்டத்தில் மனால் சவுகான் 47 ரன்களும், மொஹித் உல்வா ஆட்டமிழக்காமல் 49 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து இந்திய அணியை 339 ரன்களுக்கு அழைத்துச் சென்ற மொஹித் உல்வா வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். இதன் மூலம் இந்திய அணி 9-வது முறையாக U-19 ஆசியக் கோப்பையை கைப்பற்றியது.

இதையும் படிங்க : ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை.. டாப் 10-ல் ரிஷப் பண்ட், சுப்மன் கில்!

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை அணிக்கு அர்ஷ்தீப் சிங்!
IPL 2027 Player Trade

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை

காலணி கூட இல்லாமல் மும்பைக்கு வந்தவர்… இன்று ரூ.209 கோடி சொத்து மதிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானின் வெற்றிப் பயணம்!
Zaheer Khan's Business Journey

காலணி கூட இல்லாமல் மும்பைக்கு வந்தவர்… இன்று ரூ.209 கோடி சொத்து மதிப்பு..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com