நான்ஸ்டிக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், இரும்பு பாத்திரம்.. எதில் சமைப்பது சிறந்தது?

Best Cookware for Healthy Cooking: நான்ஸ்டிக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், இரும்பு பாத்திரம் உள்ளிட்டவற்றில் எதில் சமைப்பது சிறந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

Published on: November 13, 2026 at 2:29 pm

சென்னை, நவ.13, 2026: சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்களைத் தேர்வு செய்வது உணவின் சுவை, சமைக்கும் முறை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் நான்ஸ்டிக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் வார்ப்பிரும்பு (Cast Iron) பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான பயன்களைக் கொண்டுள்ளன என சமையல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நான்ஸ்டிக் பாத்திரங்கள் குறைந்த மற்றும் மிதமான வெப்பத்தில் சமைக்க ஏற்றவை. தோசை, ஆம்லெட், சில்லா போன்ற உணவுகளை குறைந்த எண்ணெயில் தயாரிக்கலாம். ஆனால் அதிக வெப்பத்தில் காலியாக வைப்பதைத் தவிர்க்க வேண்டும். உலோகக் கரண்டிகளைப் பயன்படுத்துவதும், மேற்பூச்சு சேதமடைந்த பாத்திரங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் சாதம், குழம்பு, காய்கறிகளை வதக்குதல் உள்ளிட்ட அன்றாட சமையலுக்கு ஏற்றவை. அதிக வெப்பத்தையும் தாங்கக்கூடியவை என்பதுடன், நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டவை. வார்ப்பிரும்பு பாத்திரங்கள் தோசை, சப்பாத்தி, பரோட்டா மற்றும் வறுத்த உணவுகள் தயாரிக்கச் சிறந்தவை. இவை வெப்பத்தை நீண்ட நேரம் தக்கவைக்கும் என்றாலும், துருப்பிடிக்காமல் பராமரிப்பது அவசியம்.

எனவே, ஒரே வகையான பாத்திரங்களை மட்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மூன்று வகைகளையும் தேவைக்கேற்பப் பயன்படுத்துவது சிறந்தது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அன்றாட சமையலுக்கு ஸ்டீல், குறைந்த எண்ணெயில் சமைக்க நான்ஸ்டிக், அதிக வெப்பத்தில் சமைக்க வார்ப்பிரும்பு எனத் தேர்வு செய்யலாம்.

இதையும் படிங்க : மாசுபாட்டால் பாதிக்கப்படும் சருமத்திற்கு களிமண் மாஸ்க்.. நிபுணர்கள் கூறும் நன்மைகள்!

உறவுகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தும் பழக்கம்.. செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
Phubbing and Relationship Problems

உறவுகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தும் பழக்கம்.. செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com