Russia Ukraine Prisoner Exchange: ரஷ்யா – உக்ரைன் இடையே மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
Russia Ukraine Prisoner Exchange: ரஷ்யா – உக்ரைன் இடையே மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Published on: November 13, 2026 at 12:17 pm
Updated on: November 13, 2026 at 12:18 pm
மாஸ்கோ, நவ.13, 2026: ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இரு நாடுகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், இரு நாடுகளும் பெருமளவிலான போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தை ரஷ்யத் தரப்பில் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கியும், உக்ரைன் தரப்பில் ருஸ்டெம் உமெரோவும் உறுதிப்படுத்தினர். கைதிகள் பரிமாற்றத்தின் எண்ணிக்கை மற்றும் நடைமுறை விவரங்கள் இறுதி செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என அமெரிக்கத் தூதர் ஜாரெட் குஷ்னர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பரிமாற்றம் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் நடைபெற வாய்ப்புள்ளதாக ரஷ்யத் தரப்பு தெரிவித்துள்ளது. இது இதுவரை நடைபெற்ற மிகப்பெரிய மனிதாபிமான அடிப்படையிலான கைதிகள் விடுதலையாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள், போருக்குப் பிந்தைய பாதுகாப்பு உத்தரவாதங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன.
இதையும் படிங்க : ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 22 பேர் காயம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com