சென்னை ஓபன் டென்னிஸ்.. நடப்பு சாம்பியன் ஜானிஸ் டியனை வீழ்த்தி மக்டா லினெட் சாம்பியன்!

Magda Linette: சென்னை ஓபன் டென்னிஸில் நடப்பு சாம்பியன் ஜானிஸ் டியனை வீழ்த்தி மக்டா லினெட் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

Published on: November 10, 2026 at 1:16 pm

சென்னை, நவ.10, 2026: சென்னையில் நடைபெற்ற WTA 250 சென்னை ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை மக்டா லினெட் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான இந்தோனேசியாவின் ஜானிஸ் டியனை எதிர்கொண்டார்.

முதலாவது செட்டை 5-7 என்ற கணக்கில் இழந்த லினெட், அடுத்தடுத்த செட்களில் அதிரடியாக விளையாடி 6-1, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 5-7, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் ஜானிஸ் டியனை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றினார்.

மழை மற்றும் தீபாவளிப் பட்டாசுப் புகையால் ஏற்பட்ட மோசமான காற்றுத் தரம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த இறுதிப்போட்டி திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மக்டா லினெட் வென்றுள்ள முதல் சர்வதேசப் பட்டம் இதுவாகும். இது அவரது டபிள்யூ.டி.ஏ. (WTA) போட்டிகளில் நான்காவது சாம்பியன் பட்டமாகும்.

இதற்கிடையே, மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி அட்கர் – ருதுஜா போசலே ஜோடி, சுவிட்சர்லாந்தின் சிமோனா வால்டர்ட் – நைமா கரமோகோ ஜோடியிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடம் பிடித்தது. சென்னை ஓபன் தொடரின் கடைசி பதிப்பாக இந்த ஆண்டு போட்டி அமைந்துள்ளது.

இதையும் படிங்க : ஜெர்மனி ஓபன் வெற்றியைத் தொடர லக்ஷ்யா சென் தீவிரம்.. உலக டூர் பைனல்ஸ் வாய்ப்பில் கவனம்!

காலணி கூட இல்லாமல் மும்பைக்கு வந்தவர்… இன்று ரூ.209 கோடி சொத்து மதிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானின் வெற்றிப் பயணம்!
Zaheer Khan's Business Journey

காலணி கூட இல்லாமல் மும்பைக்கு வந்தவர்… இன்று ரூ.209 கோடி சொத்து மதிப்பு..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com