தமிழ்நாடு கட்டமைப்பு மற்றும் கட்டுமான ஒத்துழைப்பு தொடக்கம்.. முழு விவரம்!

Tamil Nadu TNICC Formation: தமிழ்நாட்டில், ரூ.200 கோடிக்கு மேல் மதிப்பிலான திட்டங்களைச் செயல்படுத்த, “தமிழ்நாடு கட்டமைப்பு மற்றும் கட்டுமான ஒத்துழைப்பு” என்ற டி.என்.ஐ.சி.சி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Published on: November 10, 2026 at 11:23 am

Updated on: November 10, 2026 at 11:24 am

சென்னை, நவ.10, 2026: தமிழகத்தில் நகரமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு கட்டமைப்பு மற்றும் கட்டுமான ஒத்துழைப்பு” (டி.என்.ஐ.சி.சி) என்ற புதிய பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

ரூ.200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அரசு உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும், பயன்பாடின்றி உள்ள அரசு நிலங்களைப் பயன்படுத்தி வருவாய் ஈட்டுதல், நவீன நகரங்கள், தொழிற்பேட்டைகள், தொழில்நுட்பப் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப நகரங்கள் மற்றும் வணிகப் பூங்காக்களை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொள்ளும்.

அரசுத் திட்டங்களுக்கான வடிவமைப்பு, திட்ட மேலாண்மை, நவீன தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆகியவற்றையும் டி.என்.ஐ.சி.சி கவனிக்கும். இந்நிறுவனம் ரூ.15 லட்சம் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்துடனும், ரூ.10 லட்சம் தொடக்கச் செலுத்தப்பட்ட மூலதனத்துடனும் தொடங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க : தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்வு.. புதிய விலையை செக் பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com