தேனியில் பட்டாசு வெடித்ததைத் தட்டிக்கேட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு.. 3 பேர் கைது!

Theni Police Officer Death Case: தேனியில், பட்டாசு வெடித்ததைத் தட்டிக்கேட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: November 9, 2026 at 2:12 pm

தேனி, நவ.9, 2026: தேனி மாவட்டத்தில் சாலையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த இளைஞர்களைத் தட்டிக்கேட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் (56) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமதர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் பணியாற்றி வந்த செந்தில்குமார், பணியை முடித்துவிட்டு சாதாரண உடையில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பட்டாசு வெடித்து, சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்காக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்களைச் சாலையை விட்டு விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, இளைஞர் ஒருவர் முழங்கையால் தாக்கியதில் செந்தில்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ஏற்கெனவே இதய பாதிப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். செந்தில்குமாரின் உயிரிழப்புக்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com