Stalin Udhayanidhi Greece Visit: அனிருத் – காவ்யா மாறன் திருமணத்தை தொடர்ந்து, கிரீஸ் நாட்டுக்கு புறப்பட்டனர் மு.க.ஸ்டாலின், உதயநிதி.
Stalin Udhayanidhi Greece Visit: அனிருத் – காவ்யா மாறன் திருமணத்தை தொடர்ந்து, கிரீஸ் நாட்டுக்கு புறப்பட்டனர் மு.க.ஸ்டாலின், உதயநிதி.

Published on: November 9, 2026 at 1:51 pm
கிரிஸ், நவ.9, 2026: இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் திருமணத்தில் பங்கேற்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குடும்பத்தினருடன் கிரீஸ் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இன்று (நவம்பர் 9) அதிகாலை 3.50 மணிக்கு சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் புறப்பட்ட அவர்கள், துபாய் வழியாக கிரீஸ் செல்ல உள்ளனர். இந்தத் திருமண விழா நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, வரும் நவம்பர் 13-ம் தேதி அதிகாலை மீண்டும் சென்னை திரும்ப உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்தும் தனது குடும்பத்தினருடன் இந்தத் திருமணத்தில் பங்கேற்பதற்காக கிரீஸ் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதற்கிடையே, அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் நவம்பர் 21-ம் தேதி சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. இதில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீது மேலும் ஒரு பாலியல் புகார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com