Janhvi Kapoor: நடிகை ஜான்வி கபூர், தனது திரையுலகப் பயணம் குறித்து தாயார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் நடைபெற்ற உரையாடலைப் பற்றிய சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
Janhvi Kapoor: நடிகை ஜான்வி கபூர், தனது திரையுலகப் பயணம் குறித்து தாயார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் நடைபெற்ற உரையாடலைப் பற்றிய சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

Published on: November 9, 2026 at 1:05 pm
மும்பை, நவ.9, 2026: நடிகை ஜான்வி கபூர், தனது திரையுலகப் பயணம் குறித்து தாயார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் நடைபெற்ற உரையாடலைப் பற்றிய சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். நடிகை மகேஸ்வரியுடன் கலாட்டா பிளஸ் நிகழ்ச்சியில் பேசியபோது இந்த நினைவுகளை அவர் தெரிவித்துள்ளார்.
தான் நடிகையாக விரும்புவதாக ஸ்ரீதேவியிடம் முதன்முதலில் கூறியபோது, அவர் உடனடியாக முழு ஆதரவு அளிக்கவில்லை என ஜான்வி தெரிவித்துள்ளார். சினிமாவில் நடிப்பது எளிதானதல்ல என்றும், அதற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் என்றும் ஸ்ரீதேவி அறிவுறுத்தியதாகக் கூறியுள்ளார்.
மேலும், மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு முன்பு தனது நடிப்புத் திறன் குறித்து ஸ்ரீதேவிக்கு சந்தேகம் இருந்ததாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது திறமையில் நம்பிக்கை ஏற்பட்டதாக அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போது, ‘இப்போது உன்னிடம் திறமை இருக்கிறது’ என ஸ்ரீதேவி கூறியதாக ஜான்வி நினைவுகூர்ந்துள்ளார்.
இந்த உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு ஸ்ரீதேவி மறைந்த நிலையில், தனது தாயாருடனான நினைவுகளை ஜான்வி பகிர்ந்திருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க : தீபாவளி ரேஸில் முந்தும் சூர்யா.. சீன் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் இதோ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com