Veeramani Sexual Harassment Case: கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீது மேலும் ஒரு பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Veeramani Sexual Harassment Case: கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீது மேலும் ஒரு பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: November 9, 2026 at 12:41 pm
சென்னை, நவ.9, 2026: கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில், மேலும் ஒரு சிறுமி புகார் அளித்துள்ளார். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் சாட்சியாக இருந்த சிறுமி, தனக்கும் பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாகப் புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு , ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள வீரமணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை வீரமணி மீது சிறுமிகள் தொடர்பாக மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த 8 வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், விசாரணையின் ஒரு பகுதியாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெள்ளை நிற கார் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையே, 8 வழக்குகளில் இரண்டு வழக்குகளுக்கான இறுதி அறிக்கையை அடுத்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வுக் குழு திட்டமிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : தீபாவளி பண்டிகை எதிரொலி.. சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com