ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 22 பேர் காயம்!

Japan Earthquake: மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 22 பேர் காயமுற்றனர்.

Published on: November 9, 2026 at 11:46 am

டோக்கியோ, நவ.9, 2026: ஜப்பானின் மத்திய பகுதியில் இன்று (நவம்பர் 8) அதிகாலை 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கியதுடன், பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளனர்.

ஷிசுவோகா மாகாணத்தை மையமாகக் கொண்டு, அதிகாலை 1.04 மணியளவில் சுமார் 40 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐச்சி, ஷிசுவோகா உள்ளிட்ட மாகாணங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கடைகளின் கண்ணாடிகள் உடைந்தன. புத்தகக் கடைகளில் பொருட்கள் அலமாரிகளில் இருந்து கீழே விழுந்தன. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஷின்கான்சென் அதிவேக ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.

இதற்கிடையே, அடுத்த 2 முதல் 3 நாட்களில் மீண்டும் வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நிலச்சரிவு, பாறைகள் சரிந்து விழுதல் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்தும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : தீபாவளி கொண்டாடிய டொனால்ட் ட்ரம்ப்.. களை கட்டிய அமெரிக்கா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com