மேகேதாட்டு அணை கட்ட அனுமதி கூடாது.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

Vijay Opposes Mekedatu Dam: மேகேதாட்டு அணை கட்ட அனுமதி கூடாது என பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

Published on: November 8, 2026 at 2:23 pm

சென்னை, நவ.8, 2026: தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்யவும், கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் சனிக்கிழமை (நவ.7, 2026) கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகா – தமிழ்நாடு எல்லைக்கு அருகே காவிரி ஆற்றின் குறுக்கே 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையைக் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரின் வரத்து பாதிக்கப்படுவதுடன், உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள மாதாந்திர நீர் பங்கீடும் பாதிக்கப்படும் என விஜய் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், மேகேதாட்டு அணை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தை மத்திய அரசு அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்ததாக வெளியான தகவல்கள் தமிழக விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். காவிரி நீர் பற்றாக்குறை நிலவும் 2026-27ஆம் ஆண்டில், டெல்டா விவசாயிகள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை கவலையை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு எந்தவித சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கக் கூடாது என்றும், அணைத் திட்டம் தொடர்பான ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவின் முதல் ஏ.ஐ ஊழல்.. டிஜிட்டல் கரையான்.. தி.மு.க.வை விமர்சித்த அமைச்சர் ராஜ்மோகன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com