International Gold Price Drop: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சமீபகாலமாகக் குறைந்து வருகிறது.
International Gold Price Drop: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சமீபகாலமாகக் குறைந்து வருகிறது.

Published on: November 8, 2026 at 2:02 pm
சென்னை, நவ.8, 2026: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சமீபகாலமாகக் குறைந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் அவுன்ஸ் ஒன்றுக்கு 5,120 டாலராக இருந்த தங்கத்தின் விலை, அக்டோபர் 23ஆம் தேதி சுமார் 4,016 டாலராகக் குறைந்துள்ளது. இதனால் இந்தியாவிலும் தங்கப் பரிவர்த்தனை நிதிகளின் (கோல்டு இ.டி.எஃப்) மதிப்பு சரிவைக் கண்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் கோல்டு இ.டி.எஃப்-களின் மதிப்பு சுமார் 6.8 சதவீதமும், ஒரு வாரத்தில் 3.3 சதவீதமும் குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த ஓராண்டில் சராசரியாக 13 சதவீதமும், மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 31 சதவீதமும் வருவாய் அளித்துள்ளன.
11 கோல்டு இ.டி.எஃப் திட்டங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்ததில், யூ.டி.ஐ கோல்டு இ.டி.எஃப், எல்.ஐ.சி எம்.எஃப் கோல்டு இ.டி.எஃப், இன்வெஸ்கோ கோல்டு இ.டி.எஃப் ஆகிய மூன்று திட்டங்கள் சிறந்த செயல்திறன் கொண்டவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், யூ.டி.ஐ கோல்டு இ.டி.எஃப் மூன்று ஆண்டுகளில் 31.72 சதவீத வருவாயும், எல்.ஐ.சி எம்.எஃப் கோல்டு இ.டி.எஃப் ஐந்து ஆண்டுகளில் 23.47 சதவீத வருவாயும் அளித்துள்ளன.
எனினும், கோல்டு இ.டி.எஃப்-களில் முதலீடு செய்வதற்கு முன்பு நிர்வாகச் செலவு, கண்காணிப்புப் தவறுகள், பங்குச் சந்தை வர்த்தக விலை மற்றும் நிகர சொத்து மதிப்பு ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தத் தகவல்கள் முதலீட்டுக்கான பரிந்துரை அல்ல; முதலீடு செய்வதற்கு முன்பு உரிய ஆலோசனை பெறுவது அவசியம்.
இதையும் படிங்க : பண்டிகைக் காலத்தில் வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமா? வீட்டுக் கடன் டாப்-அப் எப்போது உதவும்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com