தீபாவளி சிறப்புப் பேருந்துகள்.. முதல் நாளில் சென்னையிலிருந்து 1.4 லட்சம் பேர் பயணம்!

Diwali Special Bus Travel: தீபாவளி சிறப்புப் பேருந்துகளில், முதல் நாளில் சென்னையிலிருந்து 1.4 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Published on: November 7, 2026 at 2:29 pm

சென்னை, நவ.7, 2026: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில், முதல் நாளான வியாழக்கிழமை சுமார் 1.40 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர். இந்தத் தகவலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை நள்ளிரவு வரை மொத்தம் 3,209 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 2,191 வழக்கமான பேருந்துகளும், 1,018 சிறப்புப் பேருந்துகளும் அடங்கும். சிறப்புப் பேருந்துகளில் 862 அரசு பேருந்துகளும், 156 தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

நவம்பர் 5 முதல் 7ஆம் தேதி வரை சென்னையிலிருந்து மொத்தம் 15,659 பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 6,573 வழக்கமான பேருந்துகளும், 9,086 சிறப்புப் பேருந்துகளும் அடங்கும்.

இன்று (நவம்பர் 6) 5,431 பேருந்துகளும், நாளை (நவம்பர் 7) 5,167 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட சென்னையின் ஐந்து இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதையும் படிங்க : தீபாவளி நாளில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com