உலகளவில் ரூ.127.5 கோடி வசூலித்த ‘ராமாயணா’! ‘ஆதிபுருஷ்’ சாதனையை முறியடிக்கத் தவறியது!

Ramayana Box Office Collection: உலகளவில் ரூ.127.5 கோடி வசூலித்த ‘ராமாயணா’ திரைப்படம், ‘ஆதிபுருஷ்’ சாதனையை முறியடிக்கத் தவறியுள்ளது.

Published on: November 7, 2026 at 2:19 pm

மும்பை, நவ.7, 2026: ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான ‘ராமாயணா’ திரைப்படம், நவம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பிரம்மாண்டமான விளம்பரங்களுடன் வெளியான இப்படம், முதல் நாளில் உலகளவில் ரூ.127.50 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.64.85 கோடி நிகர வசூலையும், ரூ.77.50 கோடி மொத்த வசூலையும் படம் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் சுமார் ரூ.50 கோடி வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 70 ஆயிரம் திரைகளில் வெளியான போதிலும், எதிர்பார்த்த அளவுக்கு வெளிநாட்டு வசூல் அமையவில்லை.

இதன் மூலம், இந்தியத் திரைப்படங்களின் முதல் நாள் உலகளாவிய வசூல் பட்டியலில் முதல் 15 இடங்களைக்கூட இப்படத்தால் பிடிக்க முடியவில்லை. பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூலான ரூ.128 கோடியையும், ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் ரூ.129 கோடி வசூலையும் முறியடிக்கத் தவறியுள்ளது. ‘துரந்தர் 2’ படத்தின் ரூ.202 கோடி சாதனையும் எட்டப்படவில்லை.

ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ள இப்படத்தில் சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் 2028ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்.. மதுரையில் 30 நாட்கள் திட்டம்!

‘முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்’.. மொத ராத்திரி நடிகை தீபிகா ராஜா!
Deepika Raja

‘முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்’.. மொத ராத்திரி நடிகை தீபிகா ராஜா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com