Supreme Court Bench in Chennai : சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
Supreme Court Bench in Chennai : சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

Published on: November 5, 2026 at 4:36 pm
சென்னை, நவ.5, 2026: சென்னையில் உச்சநீதிமன்றத்தின் நிரந்தர அமர்வை அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் இந்தக் கோரிக்கையை மீண்டும் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தென் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்காகப் புதுடெல்லிக்குச் செல்ல வேண்டிய நிலை இருப்பதால், பயணச் செலவு மற்றும் தூரம் காரணமாகப் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கும் நீதி கிடைப்பதை எளிதாக்க சென்னையில் உச்சநீதிமன்ற அமர்வு அமைப்பது உதவும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 130-வது பிரிவின்படி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் தலைமை நீதிபதி முடிவு செய்யும் பிற இடங்களிலும் உச்சநீதிமன்றம் செயல்படலாம் என்பதை விஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் நீண்டகாலப் பாரம்பரியம் மற்றும் வழக்கறிஞர்களின் திறமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 2004, 2006, 2008 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் அளித்த பரிந்துரைகளையும், சட்ட ஆணைய அறிக்கைகளையும் முதல்வர் மேற்கோள் காட்டியுள்ளார். சென்னையில் உச்சநீதிமன்ற அமர்வு அமைப்பது தென் மாநில மக்களுக்கு நீதியை எளிதில் அணுக உதவுவதுடன், நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தையும் வலுப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை.. தொல். திருமாவளவன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com