Tenkasi Tiger Death: தென்காசி அருகே ரயில் மோதி புலி உயிரிழந்தது தொடர்பாக, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tenkasi Tiger Death: தென்காசி அருகே ரயில் மோதி புலி உயிரிழந்தது தொடர்பாக, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published on: November 4, 2026 at 4:29 pm
தென்காசி, நவ.4, 2026: தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் பகவதிபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே, புதன்கிழமை (நவம்பர் 4) அதிகாலை ரயில் மோதி புலி ஒன்று உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்காட்டில் இருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர், தண்டவாளத்தில் புலி மீது ரயில் மோதியதாக ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தென்காசி மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், ரயில் பாதைக்கு அருகிலிருந்த மாந்தோப்பில் இருந்து வெளியே வந்த புலி, தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. குடியிருப்புப் பகுதிக்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 125 எம்.எல்.ஏக்களுக்கு அரசு கார்கள் வழங்க முடிவு.. திமுக, இடதுசாரிகள் புறக்கணிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com