பங்குச்சந்தையில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம்.. 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!

Sensex Jumps 450 Points: பங்குச்சந்தையில் ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், 450 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது.

Published on: November 3, 2026 at 1:34 pm

மும்பை, நவ.3, 2026: இந்தியப் பங்குச்சந்தையில் இன்று (நவம்பர் 3) காலை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 449 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 76 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 23,500 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது.

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான எதிர்பார்ப்பால் கச்சா எண்ணெய் விலை முந்தைய வர்த்தகத்தில் சுமார் 7 சதவீதம் சரிந்தது. இதனால் சர்வதேச சந்தைகளில் நிலவிய சாதகமான சூழலும், ஆசியப் பங்குச்சந்தைகளின் ஏற்றமும் இந்தியச் சந்தைக்கு ஆதரவாக அமைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி, மாரிகோ, பெட்ரோநெட் எல்என்ஜி, டிபிஓ டெக், என்எம்டிசி, கன்டெய்னர் கார்ப்பரேஷன் மற்றும் நேஷனல் அலுமினியம் நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. மேலும், எஸ்பிஐ, பஜாஜ் ஃபின்சர்வ், லூபின் உள்ளிட்ட நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகளும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கிடையே, மேக்ஸ்வெல் இன்ஜினியரிங் சொல்யூஷன்ஸ், வெக்ட்ராஸ் என்விரான்கான் உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய பொதுப்பங்கு வெளியீடுகளும் இன்று தொடங்குகின்றன. சர்வதேசச் சந்தை நிலவரம், கச்சா எண்ணெய் விலை மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளைப் பொறுத்து இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : தங்கம் விலை சரிவு.. சென்னையில் 22, 24 காரட் தங்கத்தின் விலை என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com