Mullaperiyar Dam Safety Review: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கேரள அரசு.
Mullaperiyar Dam Safety Review: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கேரள அரசு.

Published on: November 3, 2026 at 11:55 am
திருவனந்தபுரம், நவ.3, 2026: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை விரிவாக ஆய்வு செய்ய அனுமதித்த 2024ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த வலியுறுத்தி, கேரள அரசு உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது. இதனை கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் மான்ஸ் ஜோசப் தெரிவித்துள்ளார்.
இதற்காக உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் மோகன் வி. கட்டார்கி, கேரள அரசின் சார்பில் ஆஜராக உள்ளார்.
மேலும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாகத் தமிழகத்துடன் நீண்டகாலமாக நீடித்து வரும் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசின் தலையீட்டையும் கேரள அரசு கோர உள்ளது. பேபி அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, மாநிலத்தின் குடிநீர் விநியோகம் மற்றும் பாசன வசதிகளை மேம்படுத்தும் வகையில் நீர்வளத்துறை மற்றும் கேரள குடிநீர் ஆணையத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மம்தா பானர்ஜியை சந்தித்தார் அபிஜீத் தீப்கே.. இந்தியா கூட்டணி பேரணியில் பங்கேற்க சி.ஜே.பி மறுப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com