புதுக்கோட்டையில் ரூ.100 கோடி நலத்திட்ட உதவிகள்! முதலமைச்சர் விஜய் வழங்கினார்

Welfare Schemes: புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ரூ.100 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 104 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, தையல் இயந்திரம், டிராக்டர், கல்விக் கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Published on: November 2, 2026 at 1:29 pm

புதுக்கோட்டை, நவ. 2 2026: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று (நவம்பர் 2) புதுக்கோட்டை மாவட்டத்தில், ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்குச் சென்றார். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்களும், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அமைச்சர் முகமது பர்வேஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோரும் புத்தகங்களை வழங்கி வரவேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய பயிர் வகைகள் கண்காட்சி மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சுயதொழில் அரங்குகளை முதலமைச்சர் பார்வையிட்டார். அப்போது விவசாயிகளுடன் கலந்துரையாடிய அவர், அவர்களின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய அரசு விழாவில், புதுக்கோட்டையில் ரூ.100 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும் முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், 104 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, தையல் இயந்திரங்கள், வங்கிக் கடன் உதவிகள், டிராக்டர்கள், வேளாண் கருவிகள் மற்றும் கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையும் படிங்க: போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 சிறப்பு நீதிமன்றங்கள்.. முதல்வர் விஜய் உத்தரவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com