ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: அன்பில் மகேஷுக்கு 4ஆம் தேதி வரை போலீஸ் காவல்!

Rs. 400 crore bribery case : ரூ.400 கோடி லஞ்சப் புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, நவம்பர் 4ஆம் தேதி மாலை வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Published on: November 2, 2026 at 1:00 pm

சென்னை, நவ. 2 2026: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே, வழக்கில் முழுமையாக விசாரணை நடத்துவதற்காக அன்பில் மகேஷை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அதன் மீதான உத்தரவை நவம்பர் 2ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

அதன்படி, இன்று (நவம்பர் 2) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்பில் மகேஷை இன்று பிற்பகல் 1 மணி முதல் நவம்பர் 4ஆம் தேதி மாலை வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விசாரணைக்கு முன்பாக அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், போலீஸ் விசாரணையின்போது அன்பில் மகேஷை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விசாரணையின்போது அவரது வழக்கறிஞர் உடனிருக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் காவல் விசாரணை முடிந்ததும், நவம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு அன்பில் மகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு நாளில் தமிழைக் காக்க உறுதியேற்போம்.. முதல்வர் விஜய் அழைப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com