30 Special Courts Ordered: போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
30 Special Courts Ordered: போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Published on: November 1, 2026 at 5:46 pm
சென்னை, நவ.1, 2026: தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்கும் வகையில், கூடுதலாக 30 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
இதில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் 26 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.46.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 12 புதிய நீதிமன்றங்களும், ஏற்கெனவே உள்ள நீதிமன்றங்களுடன் கூடுதலாக 14 நீதிமன்றங்களும் அமைக்கப்பட உள்ளன.
தற்போது தமிழகத்தில் 22 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 4 நீதிமன்றங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன. புதிதாக அறிவிக்கப்பட்ட 26 நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டால், மாநிலத்தில் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கை 52 ஆக உயரும். இவை 47 காவல் மாவட்டங்களுக்குப் பயன்படும் வகையில் செயல்படும்.
அதேபோல், போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரிக்க மேலும் 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய இடங்களில் தலா ஒரு நீதிமன்றமும், சென்னையில் கூடுதலாக ஒரு நீதிமன்றமும் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாடு நாளில் தமிழைக் காக்க உறுதியேற்போம்.. முதல்வர் விஜய் அழைப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com