Indian Pilot Honoured by UAE: விமானத்தில் சக விமானி தாக்குதல் நடத்திய நிலையில் உயிரைப் பணயம் வைத்து 170 பேரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு ஐக்கிய அரபு அமீரகம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
Indian Pilot Honoured by UAE: விமானத்தில் சக விமானி தாக்குதல் நடத்திய நிலையில் உயிரைப் பணயம் வைத்து 170 பேரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு ஐக்கிய அரபு அமீரகம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

Published on: October 31, 2026 at 3:09 pm
அபுதாபி, அக்.31, 2026: துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃப்ளை துபாய் விமானத்தில், செப்டம்பர் 30ஆம் தேதி நடுவானில் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது. விமானத்தின் துணை விமானி, கேப்டன் ஸ்மித் மச்சாரை அவசரகால கோடரியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த போதிலும், விமானத்தின் கட்டுப்பாட்டைப் பாதுகாக்க அவர் போராடியுள்ளார்.
தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்தபோதும், கேப்டன் ஸ்மித் மச்சார் விமானி அறையின் கதவைத் திறக்க உதவியுள்ளார். இதையடுத்து, விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகள் இணைந்து தாக்குதல் நடத்திய துணை விமானியைக் கட்டுப்படுத்தினர். விமானத்தில் இருந்த மற்றொரு விமானியின் உதவியுடன், சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இதில் 170-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்.
இந்நிலையில், கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் விமானக் குழுவினரின் துணிச்சலான செயலுக்காக, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘ஆர்டர் ஆஃப் சயீத் II’ முதல் வகுப்பு விருதை வழங்கிக் கௌரவித்துள்ளார். படுகாயங்களிலிருந்து இன்னும் மீண்டு வரும் ஸ்மித் மச்சாரின் துணிச்சலுக்குப் பல்வேறு நாடுகளிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க : உக்ரைனில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்.. ரயில் நிலையத்தில் 13 பேர் உயிரிழப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com