Ramlila Maidan Political History: இந்திரா காந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் அன்னா ஹசாரே போராட்டம் வரை, டெல்லி ராம்லீலா மைதானத்தின் அரசியல் வரலாறு குறித்து பார்க்கலாம்.
Ramlila Maidan Political History: இந்திரா காந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் அன்னா ஹசாரே போராட்டம் வரை, டெல்லி ராம்லீலா மைதானத்தின் அரசியல் வரலாறு குறித்து பார்க்கலாம்.

Published on: October 31, 2026 at 2:33 pm
புதுடெல்லி, அக்.31, 2026: டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானம், நாட்டின் முக்கிய அரசியல் போராட்டங்கள் மற்றும் மக்கள் இயக்கங்களுக்குச் சாட்சியாக விளங்கி வருகிறது. 1930களில் உருவாக்கப்பட்ட இந்த மைதானம், ஆரம்பத்தில் ராம்லீலா விழாக்கள் நடத்தும் இடமாகப் பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் போராட்டக் களமாக மாறியது.
1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அரசுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்துக்குப் பிறகு அன்றைய தினமே நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1977ஆம் ஆண்டு அவசரநிலை முடிவடைந்த பின்னரும் இதே மைதானத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தினார்.
2011ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கமும் இந்த மைதானத்தின் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது. லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த இயக்கத்தின் தொடர்ச்சியாகவே ஆம் ஆத்மி கட்சி உருவானது. இதேபோல், பாபா ராம்தேவின் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் இயக்கங்களும் இங்கு நடைபெற்றுள்ளன.
விவசாயிகள் போராட்டம், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டக் கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களுக்கும் ராம்லீலா மைதானம் களமாக இருந்துள்ளது. தற்போது டெல்லியின் ஜந்தர் மந்தர் போராட்டத் தளமாக அறிவிக்கப்பட்ட அந்தஸ்தை இழந்துள்ள நிலையில், அதற்குப் பதிலாக ராம்லீலா மைதானம் உள்ளிட்ட மூன்று இடங்களைப் போராட்டங்களுக்கான மாற்று இடங்களாக டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் தேசிய அளவிலான போராட்டங்களின் முக்கிய மையமாக ராம்லீலா மைதானம் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சி.. எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com