Robin Uthappa MI Coach: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Robin Uthappa MI Coach: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Published on: October 31, 2026 at 1:13 pm
மும்பை, அக்.31, 2026: ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்லெனகன் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், முன்னாள் இந்திய வீரர் தவால் குல்கர்னி பந்துவீச்சு மேம்பாட்டுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் புதிய தலைமைப் பயிற்சியாளர் கைரன் பொல்லார்டின் கீழ் செயல்பட உள்ளனர்.
முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த மஹேலா ஜெயவர்த்தனே மாற்றப்பட்டு, கைரன் பொல்லார்டு நியமிக்கப்பட்டார். கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வெல்லாத மும்பை அணி, 2027 தொடரில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் நோக்கில் பயிற்சியாளர் குழுவை முழுமையாக மாற்றியமைத்துள்ளது.
இதையும் படிங்க : நியூசிலாந்திடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. 4வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com