India vs New Zealand T20: நியூசிலாந்திடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது; 4வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
India vs New Zealand T20: நியூசிலாந்திடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது; 4வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Published on: October 31, 2026 at 12:30 pm
புதுடெல்லி, அக்.31, 2026: இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது.
நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் கிளென் பிலிப்ஸ் 49 பந்துகளில் 107 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடங்கும். மைக்கேல் பிரேஸ்வெல் 25 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.
இதையடுத்து 260 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜேக்கப் டஃபி அபாரமாகப் பந்துவீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். திலக் வர்மா 35 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசிப் போட்டி நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க : நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.. தீவிர வலைப்பயிற்சியில் ஷுப்மன் கில்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com