கோயம்பேடு சந்தையில் பீன்ஸ் விலை உயர்வு.. மாங்காய் விலை சரிவு!

Koyambedu Vegetable Prices: சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் அக்டோபர் 30ஆம் தேதியான இன்று, காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Published on: October 31, 2026 at 11:48 am

சென்னை, அக்.31, 2026: சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் அக்டோபர் 30ஆம் தேதியான இன்று, காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 14ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில், பீன்ஸ் விலை கிலோவுக்கு 40 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், பெரிய வெங்காயம் கிலோ 75 ரூபாய்க்கும், தக்காளி 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து 170 ரூபாயாக உள்ளது.

மறுபுறம், மாங்காய் விலை கிலோவுக்கு 40 ரூபாய் குறைந்து 90 ரூபாயாகவும், எலுமிச்சை 30 ரூபாய் குறைந்து 150 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. பச்சை மிளகாய் 60 ரூபாய்க்கும், பூண்டு 230 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதர காய்கறிகளான உருளைக்கிழங்கு கிலோ 32 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் இந்த விலை நிலவரம் மொத்த சந்தை விலையாகும்; சில்லறை விற்பனையில் விலை மாறுபடலாம்.

இதையும் படிங்க :நவம்பர் 1 முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு.. விலை எவ்வளவு தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com