தமிழக அரசுப் பணிகளுக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு.. முதலமைச்சர் விஜய் உத்தரவு!

CM Vijay: தமிழக அரசுப் பணிகளுக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தி, முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Published on: October 30, 2026 at 8:06 pm

சென்னை, அக்.30, 2026: தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனத்தில் வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். போட்டித் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வயது வரம்பு உயர்வு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வயது உச்சவரம்புடன் கூடுதலாக 5 ஆண்டுகள் வழங்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அதிகரிக்கும்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்கெனவே வழங்கப்படும் வயதுச் சலுகையுடன் இந்த கூடுதல் சலுகையும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு 2026 அக்டோபர் 30-ஆம் தேதி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இதன் மூலம் வயது வரம்பு காரணமாக அரசுப் பணித் தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : துணை மருத்துவப் படிப்புகளில் 3,878 கூடுதல் இடங்கள்.. இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் அவதி!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு!
Rain Alert

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com