நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன்.. மனைவி அதிதி ராவ் ஹைதரிக்கு சித்தார்த் காதல் வாழ்த்து!

Siddharth: நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன் என மனைவி அதிதி ராவ் ஹைதரிக்கு சித்தார்த் காதல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published on: October 30, 2026 at 2:41 pm

ஹைதராபாத், அக்.30, 2026: நடிகை அதிதி ராவ் ஹைதரியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கணவரும் நடிகருமான சித்தார்த் சமூக வலைதளத்தில் உருக்கமான வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அதிதியைத் தனது அன்புக்குரியவர் என்று குறிப்பிட்ட அவர், உலகிலேயே இனிமையான, அன்பான மற்றும் திறமையான நபர் எனப் பாராட்டியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சித்தார்த் பகிர்ந்துள்ளார். அதில், தங்களது செல்லப் பூனையுடன் அதிதி இருக்கும் புகைப்படமும், அவரது தலையில் சித்தார்த் முத்தமிடும் கருப்பு வெள்ளைப் புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

தனது பதிவில், அதிதி தனது வாழ்க்கையின் முக்கியமான பாதி என்று குறிப்பிட்ட சித்தார்த், அவருடன் இன்னும் பல ஆண்டுகள் இணைந்து பயணிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், “நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன்; உங்களை நேசிக்கிறேன்” என்று குறிப்பிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதரி இருவரும் கடந்த 2021ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான ‘மஹா சமுத்திரம்’ படப்பிடிப்பின்போது சந்தித்தனர். தொடர்ந்து காதலித்து வந்த இருவரும், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானாவின் வனபர்த்தியில் உள்ள பழமையான கோயிலில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.

இதையும் படிங்க : சூர்யாவின் ‘சீன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்.. நவம்பர் 6-ல் படம் ரிலீஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com