டாஸ்மாக்-கில் ரூ.1,000-க்கு மேல் மது வாங்கினால் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்.. நவம்பர் 1 முதல் அமல்!

TASMAC Digital Payment Rule: டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேல் மது வாங்கினால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டாயமாக்கப்பட உள்ளது.

Published on: October 27, 2026 at 11:46 am

சென்னை, அக்.27, 2026: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ரூ.1,000-க்கு மேல் மதுபானங்கள் வாங்கினால் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 4,048 மதுபானக் கடைகளிலும் இந்த நடைமுறை படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, வாடிக்கையாளர்கள் யுபிஐ (யூ.பி.ஐ), டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம். இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட பாயின்ட் ஆஃப் சேல் (POS) இயந்திரங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வரும் 2027 ஜனவரி 1-ஆம் தேதி முதல், ரூ.500-க்கு மேல் மதுபானங்கள் வாங்கினாலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டாயமாக்கப்பட உள்ளது. ரொக்கப் பணத்தைக் கையாள்வதில் ஏற்படும் சிக்கல்களைக் குறைப்பதுடன், கணக்குப் பராமரிப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகபட்ச சில்லறை விலையைவிட (MRP) கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக எழும் புகார்களைக் கட்டுப்படுத்தவும் இந்த நடைமுறை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து விற்பனைகளுக்கும் ரசீது வழங்க வேண்டும் என்றும், ஊழியர்கள் தங்களது தனிப்பட்ட யுபிஐ கணக்குகள் அல்லது க்யூஆர் குறியீடுகள் மூலம் பணம் பெறக்கூடாது என்றும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க : பறக்கும் கார் உருவாக்கும் டெஸ்லா.. சீன வாகன நிறுவனங்களுக்கு விடுக்கும் சவாலா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com