eBay: இபே நிறுவனத்தில் 1,100 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2026-ல் 2-வது முறையாக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
eBay: இபே நிறுவனத்தில் 1,100 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2026-ல் 2-வது முறையாக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Published on: October 22, 2026 at 3:49 pm
சென்னை, அக்.22, 2026: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான இபே (eBay), தனது மொத்த ஊழியர்களில் சுமார் 9 சதவீதம் பேரைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1,100 ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகளை எளிமைப்படுத்தி, வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமுள்ள துறைகளில் கவனம் செலுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இபே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜேமி ஐயனோன், ஊழியர்களுக்கு அனுப்பிய குறிப்பில், எதிர்கால வளர்ச்சிக்கான முதலீடுகளையும் வளங்களையும் சரியான துறைகளில் பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்து தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு, கடந்த பிப்ரவரி மாதத்திலும் சுமார் 800 ஊழியர்களை நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது. தற்போது மீண்டும் பணிநீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உயர்தர சொகுசுப் பொருட்கள், சேகரிப்புப் பொருட்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பொருட்களின் விற்பனையில் இபே நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இளம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், பயன்படுத்தப்பட்ட ஆடைகளை மறுவிற்பனை செய்யும் டெபாப் (Depop) தளத்தையும் 1.4 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு அடுத்த சில நாட்களில் தகவல் தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் புதிய வசதி.. அழைப்பை ஏற்பதற்கு முன்பே யார், எதற்காக அழைக்கிறார்கள் என அறியலாம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com