சென்னை உட்பட 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!

Rain Alert: சென்னை உட்பட 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Published on: October 18, 2026 at 11:06 am

சென்னை, அக்.18, 2026: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உட்பட 21 மாவட்டங்களில் வார இறுதி நாட்களான அக்டோபர் 18, 19 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் குடை உள்ளிட்ட மழைக்கால முன்னெச்சரிக்கைப் பொருட்களுடன் வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் மழைப்பொழிவுக்குக் காரணமாக உள்ளன. மாநிலம் முழுவதும் வரும் அக்டோபர் 26-ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அக்டோபர் 20-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக மாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கலாம் என்றும், மாத இறுதியில் ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் வானிலை அமைப்பால் தமிழகக் கடலோரப் பகுதிகளில் மழை மேலும் அதிகரிக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதையும் படிங்க : வீரமணி வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி.. சென்னை உயர் நீதிமன்றம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com