எல். முருகன் திடீர் ராஜினாமா.. பரபரப்பு பின்னணி!

L. Murugan Resigns : மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து எல். முருகன் ராஜினாமா செய்துள்ளார்; இது தொடர்பான பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Published on: October 13, 2026 at 6:50 pm

புதுடெல்லி, அக்டோபர் 13, 2026; மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். மேலும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது முடிவு குறித்து எல். முருகன் வெளியிட்ட அறிக்கையில், பாஜகவை தமிழகத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முழுநேர அரசியல் பணியில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் வளர்ச்சிக்காகத் தீவிரமாகக் களப்பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும், கிராமம் கிராமமாகச் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து கட்சியை வலுப்படுத்தப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூலித் தொழிலாளர்களின் மகனாகப் பிறந்து பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பணியாற்றியதைத் தனது வாழ்வின் பெருமையாகக் கருதுவதாக எல். முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சராகப் பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான பொறுப்பிலிருந்து விலகி தமிழக அரசியலில் நேரடியாகக் களமிறங்க அவர் எடுத்துள்ள இந்த முடிவு, 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜகவின் அரசியல் செயல்பாடுகளில் முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிங்க அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்கிறது.. டெல்லி கம்பன் கழகக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள் கருத்து! Tamil Growth Among Gen Z

ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்கிறது.. டெல்லி கம்பன் கழகக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள் கருத்து!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com