Best TVs 2026: 2026-ம் ஆண்டுக்கான சிறந்த டிவி விருதுகளில் சாம்சங், சோனி, எல்ஜி, சியோமி நிறுவனங்கள் அசத்தியுள்ளன.
Best TVs 2026: 2026-ம் ஆண்டுக்கான சிறந்த டிவி விருதுகளில் சாம்சங், சோனி, எல்ஜி, சியோமி நிறுவனங்கள் அசத்தியுள்ளன.

Published on: October 13, 2026 at 6:22 pm
சென்னை, அக்.13, 2026: அமேசான் இந்தியா வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டுக்கான சிறந்த டிவி விருதுகளில் சாம்சங், சோனி, எல்ஜி, சியோமி உள்ளிட்ட நிறுவனங்களின் தொலைக்காட்சிகள் பல்வேறு பிரிவுகளில் அங்கீகாரம் பெற்றுள்ளன. படத்தின் தரம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், திரையின் அளவு, ஸ்மார்ட் வசதிகள் மற்றும் விலைக்கு ஏற்ற அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு டிவி மாடல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் 55 அங்குல மினி எல்இடி 4K விஷன் ஏஐ டிவி, ஆண்டின் சிறந்த பிரபலமான டிவி விருதைப் பெற்றுள்ளது. சோனியின் 55 அங்குல பிராவியா 2 (M2) 4K டிவி, மிகவும் நம்பகமான டிவி என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. எல்ஜியின் 65 அங்குல NU87 நானோ 4K டிவி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பிரிவில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சியோமியின் 55 அங்குல FX Pro QLED டிவி, விலைக்கு ஏற்ற சிறந்த டிவி விருதையும், ஹைசென்ஸின் 85 அங்குல ULED மினி எல்இடி டிவி, பெரிய திரை டிவி பிரிவில் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளன. லுமியோ விஷன் 9 55 அங்குல QD மினி எல்இடி டிவி, அதிகம் பேசப்படும் டிவி மாடலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய டிவி வாங்கத் திட்டமிடுவோர் இந்த விருதுகளைத் தொடக்க வழிகாட்டியாகப் பயன்படுத்தலாம்; எனினும், வாங்குவதற்கு முன் தற்போதைய விலை, திரையின் தரம், மென்பொருள் வசதிகள், உத்தரவாதம் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம் ஆகம்.
இதையும் படிங்க :நாகப்பட்டினத்தில் நிதி மற்றும் இணைய மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி: பஜாஜ் ஃபைனான்ஸ் ஏற்பாடு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com