2022ல் சுட்டுக்கொலை.. இந்தியா வந்த ஷின்சோ அபே மனைவி.. பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Modi Meets Akie Abe: பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் மனைவி அகி அபேவை சந்தித்து பேசினார்.

Published on: October 9, 2026 at 4:05 pm

புதுடெல்லி, அக்.9, 2026: பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் மனைவி அகி அபேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஷின்சோ அபேவுடனான தனது நீண்டகால நட்பையும், இந்தியா–ஜப்பான் உறவுகளை வலுப்படுத்த அவர் ஆற்றிய பங்கையும் பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். ஷின்சோ அபேவை அன்பான நண்பர் என்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா–ஜப்பான் இடையேயான உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதில் ஷின்சோ அபே முக்கிய பங்காற்றியதாக பிரதமர் மோடி தெரிவித்தார். குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் கலாசார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்ததாக அவர் நினைவுகூர்ந்தார். இந்தியாவுடனான அபேவின் தனிப்பட்ட அக்கறை மற்றும் இரு நாடுகளின் நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற அவரது தொலைநோக்குப் பார்வையையும் மோடி சுட்டிக்காட்டினார்.

ஷின்சோ அபே 2022-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பின்னரும் இந்தியா–ஜப்பான் உறவுகளில் அபேவின் பங்களிப்பு தொடர்ந்து நினைவுகூரப்பட்டு வருகிறது. இந்நிலையில் அகி அபேவை பிரதமர் மோடி சந்தித்திருப்பது, இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்பையும், ஷின்சோ அபேவுடனான தனது தனிப்பட்ட உறவையும் பிரதிபலிப்பதாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : பினராய் விஜயன், மகள், மருமகன் மீது வழக்குப்பதிவு.. நீதிமன்றம் அனுமதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com