Coimbatore Pappammal death | கோவை பாப்பம்மாள் மரணத்துக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய முன்னோடி பாப்பம்மாள் பாட்டி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
110 வயதான பாப்பம்மாள் பாட்டி கடைசி வரை இயற்கை விவசாயத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இளம் தலைமுறையினருக்கு இயற்கை விவசாயம் குறித்து பாடங்களை நடத்தியுள்ளார்.
இவரது சேவைகளை மதித்து 2021-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே காலில் விழுந்து வணங்கியது அவருக்கு வழங்கப்பட்ட சிறந்த அங்கீகாரமாகும்.
பாப்பம்மாள் பாட்டியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க
Anbumani Ramadoss replied to a question about Vijay: நடிகர் விஜய் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், எப்பா சாரி ப்ரோ…..
Anbumani Ramadoss: தமிழ்நாட்டில் காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான காவல் ஆணையம் பரிந்துரை செய்து 50 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ளநிலையில் உடனடியாக செயல்படுத்துமாறு பா.ம.க. தலைவர் அன்புமணி…
PMK to hold protest in Chennai: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பா.ம.க. ஒருங்கிணைப்பில் சென்னையில் 20ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்த உள்ளது….
மாநில தன்னாட்சி கோரும் திமுக, உள்ளாட்சிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை பறிப்பது என்ன வகை ஜனநாயகம் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்….
அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்கள் 30,000 பேருக்கு ஓராண்டாக வழங்கப்படாத ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….
தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க ஊழல்கள், முறைகேடுகளை களைய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்