ஆசிய விளையாட்டில் கோல்ஃப் போட்டியில் தங்கப் பதக்கம்.. பிரணவி உர்ஸ் சாதனை!

Pranavi Urs: இந்தியாவின் பிரணவி உர்ஸ், பெண்களுக்கான தனிநபர் கோல்ஃப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

Published on: October 4, 2026 at 5:32 pm

டோக்கியோ, அக்.4, 2026: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பிரணவி உர்ஸ், பெண்களுக்கான தனிநபர் கோல்ஃப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் பெண்கள் தனிநபர் கோல்ஃப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மைசூரைச் சேர்ந்த 23 வயதான பிரணவி, நான்கு சுற்றுகளின் முடிவில் 15-அண்டர் 265 என்ற மொத்த ஸ்கோருடன் முதலிடம் பிடித்தார்.

இறுதிச்சுற்றுக்கு முன்பு மூன்று ஷாட்கள் முன்னிலையில் இருந்த பிரணவிக்கு 3-வது குழியில் டிரிப்பிள் போகி ஏற்பட்டதால் முன்னிலை பறிபோனது. இருப்பினும், அதன்பின்னர் சிறப்பாக விளையாடிய அவர் மேலும் மூன்று பேர்டிகளை பதிவு செய்து மீண்டும் முன்னிலைக்கு வந்தார். இறுதிச்சுற்றில் ஈவன்-பார் 70 எடுத்த பிரணவி, சீனாவின் யின் ருயோனிங் மற்றும் சிங்கப்பூரின் ஷானன் டான் ஆகியோரை விட ஒரு ஷாட் முன்னிலையில் போட்டியை நிறைவு செய்தார்.

தனிநபர் தங்கத்துடன், பெண்கள் அணிப் போட்டியிலும் பிரணவி உர்ஸ், அதிதி அசோக், திக்ஷா டாகர் ஆகியோர் இணைந்து இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளனர். சீனா தங்கமும், இந்தியா வெள்ளியும், சீன தைபே வெண்கலமும் வென்றன. 2002ஆம் ஆண்டு ஷிவ் கபூர் ஆடவர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற பின்னர், ஆசிய விளையாட்டில் இந்திய கோல்ஃபுக்கு கிடைத்த முதல் தனிநபர் தங்கம் இதுவாகும்.

இதையும் படிங்க : ஆசிய கிரிக்கெட்.. பாகிஸ்தானை 19 ரன்னில் வீழ்த்திய இந்தியா.. தங்கப் பதக்கம் வென்று அசத்தல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com