Puzhal Lake Murder: புழல் ஏரிக் கரையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் முகுந்தன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Puzhal Lake Murder: புழல் ஏரிக் கரையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் முகுந்தன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: October 1, 2026 at 3:10 pm
திருவள்ளூர், அக்.1, 2026: திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரிக் கரையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் முகுந்தன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகுந்தன் தனது நண்பர் சஞ்சய்யுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, சஞ்சய் மேலும் தனது இரண்டு நண்பர்களை அங்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு முகுந்தன், “நமக்கே இது போதாது; எதற்கு இவர்களை அழைக்கிறாய்?” எனக் கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் முகுந்தனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த முகுந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிகிறது. கொலை செய்ததைத் தொடர்ந்து அச்சமடைந்த மூவரும், தடயங்களை மறைக்கும் நோக்கில் முகுந்தனின் உடலை தீ வைத்து எரித்துவிட்டு, பின்னர் உடலை புழல் ஏரியில் வீசியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் போலீஸார் விசாரணை நடத்தி, சஞ்சய் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம், பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் உடலை ஏரியில் வீசியது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மது அருந்தியபோது ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறு கொலையில் முடிந்து, பின்னர் உடலை மறைக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : அமைச்சர் வன்னியரசுக்கு எதிராக போராட்டம்.. திண்டுக்கல்லில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com