Minister Ramesh: ஆபாச பேச்சுக்கள் தான் திமுகவின் டிஎன்ஏ என இந்து அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
Minister Ramesh: ஆபாச பேச்சுக்கள் தான் திமுகவின் டிஎன்ஏ என இந்து அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

Published on: September 14, 2026 at 1:46 pm
சென்னை செப்டம்பர் 14, 2026; இந்து அறநிலை துறை அமைச்சர் ரமேஷ், திமுகவினர் ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாக கூறினார். இது குறித்து பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசி வருகிறார்; அதேபோல் திமுகவினரும் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசுகிறார்கள்.
இது போன்ற இரட்டை அர்த்த ஆபாச பேச்சுக்கள் திமுகவின் டிஎன்ஏ விலேயே உள்ளது” என்றார். மேலும் திமுக ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை என்றால் தான் அது ஆச்சரியம் என கூறிய அமைச்சர் ரமேஷ், வீட்டில் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேச நினைப்பவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல தயாராக இல்லை எனவும் கூறினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுகவின் ஆ. ராசா ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டுக்கள் இருந்தன. இது தொடர்பான வைரல் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்துக் காணப்படுகின்றன; இந்த நிலையில் அமைச்சர் ரமேஷ் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; முதல்வர் விஜய் மாதிரி விநாயகர் சிலைகள்.. மக்கள் மத்தியில் வாங்க ஆர்வம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com