ஆசியக் கோப்பை கிரிக்கெட்: மிரட்டிய ஷஃபாலி.. வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா!

INDIA IN FINAL: ஷஃபாலி வர்மாவின் அதிரடி அரைசதம், இந்திய பந்துவீச்சாளர்களின் அபார செயல்பாடு ஆகியவற்றால் வங்கதேசத்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மகளிர் ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

Published on: September 11, 2026 at 5:31 pm

துபாய், செப். 11, 2026: மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடரின் முதல் அரையிறுதியில் வங்கதேசத்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது.

மிரட்டிய ஷஃபாலி வர்மா

தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 40 பந்துகளில் 64 ரன்கள் விளாசி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஹர்மன்ப்ரீத் கவுர் 24 ரன்களும், ரிச்சா கோஷ் 21 ரன்களும் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ஷஃபாலி வர்மா போட்டியின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய பந்துவீச்சில் சிக்கிய வங்கதேசம்

150 ரன்கள் என்ற இலக்கை துரத்திய வங்கதேச அணியால் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளும், நந்தினி சர்மா 2 விக்கெட்டுகளும், ஸ்ரீ சரணி மற்றும் பிரேமா ராவத் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். வங்கதேச அணியில் ஷோர்னா அக்டர் ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் எடுத்தார்.

இந்தியா எதிர்கொள்ளப் போவது யார்?

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் தொடர்ந்து 10-வது முறையாக இடம்பிடித்துள்ளது. இன்று (செப்டம்பர் 11) நடைபெறும் 2-வது அரையிறுதியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் துபாயில் இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி) மோதுகின்றன. அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இந்தியா செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.

இதையும் படிங்க: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மனு.. டெல்லி ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com