சிக்கன், பால், முட்டை விலைகள் குறைய வாய்ப்பில்லை.. ஏன் தெரியுமா?

Price Rise: முட்டை, பால், சிக்கன் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைய வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

Published on: September 9, 2026 at 1:22 pm

சென்னை செப்டம்பர் 9, 2026: இந்தியாவில் முட்டை, கோழி இறைச்சி மற்றும் பால் விலைகள் விரைவில் குறைய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கான முக்கிய காரணம் கால்நடைத் தீவனப் பொருட்களின் விலை அதிகரிப்பாகும். சோளம் மற்றும் சோயாபீன் புண்ணாக்கு போன்ற மூலப்பொருட்களின் விலை கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால், உற்பத்தியாளர்கள் அதிக செலவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சில்லறை விற்பனையில் ஒரு முட்டையின் விலை தற்போது ரூ.7 முதல் ரூ.9 வரை உள்ளது. தீபாவளிக்குப் பிறகு குளிர்காலம் தொடங்கும் நிலையில், முட்டை தேவையும் விலையும் இயல்பாகவே அதிகரிக்கும். ஆனால், இந்த ஆண்டு விலை உயர்வுக்கு தீவனப் பொருட்களின் விலை உயர்வே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சோளம், சோயாபீன் புண்ணாக்கு போன்றவை கோழி மற்றும் கால்நடை தீவனத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.

கறிக்கோழி தீவனத்தில் 55-65% சோளம், முட்டையிடும் கோழித் தீவனத்தில் 50-60% சோளம், கால்நடை தீவனத்தில் 15-20% சோளம் பயன்படுத்தப்படுகிறது. புரதச்சத்து தேவைக்காக சோயாபீன், கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி, பருத்திவிதை போன்றவற்றின் புண்ணாக்கு பயன்படுத்தப்படுகிறது. கறிக்கோழித் தீவனத்தில் 25-30% சோயாபீன் புண்ணாக்கு, முட்டையிடும் கோழித் தீவனத்தில் 18-20% சோயாபீன் புண்ணாக்கு சேர்க்கப்படுகிறது.

சோளத்தின் விலை கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரூ.2,537 இருந்த நிலையில், இவ்வாண்டு ஆகஸ்டில் ரூ.2,759 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், சோயாபீன் புண்ணாக்கின் விலை ஆகஸ்ட் 2025-இல் டன் ஒன்றுக்கு ரூ.38,186 இருந்த நிலையில், ஆகஸ்ட் 2026-இல் ரூ.58,156 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சற்று குறைந்தாலும், கடந்த ஆண்டு சராசரி விலையை விட மிக அதிகமாகவே உள்ளது.

மொத்தத்தில், கால்நடைத் தீவனப் பொருட்களின் விலை உயர்வு, நுகர்வோர் தேவையின் அதிகரிப்பு மற்றும் பருவநிலை காரணிகள் அனைத்தும் சேர்ந்து முட்டை, கோழி இறைச்சி மற்றும் பால் விலைகள் விரைவில் குறைய வாய்ப்பில்லையென நிபுணர்கள் கூறுகின்றனர். இது நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தினாலும், உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அதிக செலவுகளை சமாளிக்க உதவுகிறது.

இதையும் படிங்க; சில்லறை கடன்கள் 21.4% அதிகரிப்பு.. ஜூலை மாதத்தில் NBFC நிதி நிறுவனங்கள் செயல்பாடு எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com