மியாமி விமான நிலையத்தில் பயங்கர விபத்து! அமேசான் சரக்கு விமானம் தீப்பிடித்து 5 பேர் பலி

Miami Plane Crash: அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். விமானம் பல வாகனங்கள் மீது மோதி தீப்பிடித்த நிலையில், 5 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து FAA மற்றும் NTSB விசாரணை நடத்தி வருகின்றன.

Published on: September 7, 2026 at 4:15 pm

மியாமி, செப். 7, 2026: அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்துக்காக இயக்கப்பட்ட சரக்கு விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமேசான் பிரைம் ஏர் விமானம் 7598, புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரில் இருந்து மியாமிக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 2 மணியளவில் தரையிறங்கியபோது ஓடுபாதையை கடந்து சென்ற விமானம், அருகில் இருந்த பல வாகன்கள் மீது மோதியது. தொடர்ந்து விமானத்தில் தீப்பிடித்து, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

விபத்து ஏற்பட்டதும் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. விமானத்தின் காக்பிட்டில் விமானி மற்றும் துணை விமானி சிக்கியிருந்ததாகவும், சிலர் வாகனங்களுக்குள் சிக்கியிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டதால், மீட்புப் பணிகளும் தீயணைப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் விமானத்தில் இருந்தவர்களா அல்லது விமானம் மோதிய வாகனங்களில் இருந்தவர்களா என்பது உடனடியாகத் தெளிவாகவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) விசாரணையைத் தொடங்கியுள்ளன. அமேசான் நிறுவனம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பிரான்ஸ் நாட்டில் பிரம்மாண்ட இந்து கோவில்! இந்தியா–பிரான்ஸ் உறவுக்கு புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி

பிரான்ஸ் நாட்டில் பிரம்மாண்ட இந்து கோவில்! இந்தியா–பிரான்ஸ் உறவுக்கு புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி
India-France Ties

பிரான்ஸ் நாட்டில் பிரம்மாண்ட இந்து கோவில்! இந்தியா–பிரான்ஸ் உறவுக்கு புதிய அத்தியாயம்: பிரதமர்

நேபாள கோர வெள்ளம், நிலச்சரிவு: 600-க்கும் மேற்பட்டோர் சுரங்கங்களில் சிக்கி தவிப்பு! மீட்புப் பணிகள் தீவிரம்
Nepal Floods

நேபாள கோர வெள்ளம், நிலச்சரிவு: 600-க்கும் மேற்பட்டோர் சுரங்கங்களில் சிக்கி தவிப்பு! மீட்புப்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com