திருநெல்வேலியில் ஆகஸ்ட் 25-ல் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

Power Cut: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 25-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

Published on: August 22, 2026 at 8:21 pm

திருநெல்வேலி, ஆகஸ்ட் 22: திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் வருகிற 25.8.2026, செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான்குளம், புலவன் குடியிருப்பு, கோவிந்தபேரி, தெய்வநாயகபேரி, மீனவன்குளம், பட்டன்காடு, இடையான்குளம், கங்கணாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், மலையடி மற்றும் மேல்கரை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதிகள்

பராமரிப்பு பணிகளால் சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும். பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மின்தடை நேரத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய மின் பணிகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒகேனக்கல்லில் 12,000 கனஅடி.. காவிரியில் திடீர் நீர்வரத்து உயர்வு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com