Tiruppur | வங்கதேசத்தை சேர்ந்த 3 கொலையாளிகள் திருப்பூரில் கைது செய்யப்பட்டனர்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Tiruppur | வங்கதேசத்தை சேர்ந்த 3 கொலையாளிகள் திருப்பூரில் கைது செய்யப்பட்டனர்.
Published on: September 26, 2024 at 4:39 pm
Tiruppur | வங்க தேசம் நாட்டைச் சேர்ந்தவர்கள் தன்வீர் அஹமது (29), சோஹா (22), மம்மூல் (28) இவர்கள் மூவரும் திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். மேலும், இவர்கள் திருப்பூர் என போலியாக ஆதார் அட்டையும் பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தில் நடந்த கொலை ஒன்றில் தொடர்புடையவர்கள் ஆவார்கள்.
இவர்கள் தற்போது தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இவர்கள் சட்ட விரோதமாக திருப்பூரில் தங்கி இருந்ததும், இவர்கள் மீது கொலை குற்றச்சாட்டு உள்ளதும் தெரியவந்துள்ளது. அதாவது, இவர்கள் தனது அத்தையிடம் சண்டையிட்ட மாமாவை அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
தற்போது இவர்களுக்கு போலியான ஆதார் அட்டை எடுத்து கொடுத்த இடைத்தரகரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க :செந்தில் பாலாஜிக்கு பிணை; சிறப்பான தீர்ப்பு: கி. வீரமணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com