Annamalai: மதுவுக்கு எதிராக 94 நாட்கள் மௌன போராட்டம் நடத்திய காந்தியவாதி பிராங்கிளின் ஆசாத் காந்திக்கு ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
Annamalai: மதுவுக்கு எதிராக 94 நாட்கள் மௌன போராட்டம் நடத்திய காந்தியவாதி பிராங்கிளின் ஆசாத் காந்திக்கு ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

Published on: August 13, 2026 at 11:39 am
சென்னை ஆகஸ்ட் 13, 2026; மதுவுக்கு எதிராக 94 நாட்கள் மௌன போராட்டம் நடத்திய காந்தியவாதி பிராங்கிளின் ஆசாத் காந்திக்கு ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை பாராட்டி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது, மதுவுக்கும், போதைப்பொருள்களுக்கும் எதிராக, கடந்த மே 11 முதல் நேற்று ஆகஸ்ட் 12 வரை, 94 நாட்கள் தொடர்ந்து மௌனப் போராட்டத்தை மேற்கொண்ட, சேலத்தைச் சேர்ந்த மூத்த காந்தியவாதியும், கல்வியாளருமாகிய, ஐயா டாக்டர் திரு. சி. பிராங்க்ளின் ஆசாத் காந்தி அவர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மதுவிலக்கிற்காக, போராட்டம், பிரச்சாரம், சத்தியாகிரகம், பாதயாத்திரை என பல்வேறு அகிம்சை வழிகளில் குரல் கொடுத்து வருகிறார். சேலத்திலிருந்து சபர்மதி, சேலத்திலிருந்து மதுரை என பல நீண்ட பாதயாத்திரைகளை மேற்கொண்டு, மக்களிடையே மதுவிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
திருக்குறளின் 1330 குறள்களைப் போலவே, 1330 நாட்கள் தினமும் 1½ மணி நேரம் காந்தி சிலை முன்பு மதுவுக்கும் போதைப்பொருள்களுக்கும் எதிராக பதாகை ஏந்தி நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். தமது 95 வயதிலும், மது உள்ளிட்ட போதைப்பொருள்களுக்கு எதிரான அவரது மன உறுதி, இளைய தலைமுறைக்கு முன்னுதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மனிதர் தனது வாழ்நாளையே சமூகத்தின் நலனுக்காக அர்ப்பணித்திருப்பது மிகப்பெரிய தியாகம். ஐயா டாக்டர் பிராங்க்ளின் ஆசாத் காந்தி அவர்களின் மதுவிலக்கு போராட்டத்திற்கு தலைவணங்கி, அவரது ஐம்பது ஆண்டுகளைக் கடந்த மேலான சமூகப் பணிகளுக்கு, எங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மகளிர் இடஒதுக்கீடு சலுகை அல்ல, சமூக நீதி.. தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com