தேர்தல் வாக்குறுதி ஒன்று, செய்வது வேறொன்றா? த.வெ.க அரசுக்கு டி.டி.வி தினகரன் கேள்வி

TTV Dhinakaran: தேர்தல் வாக்குறுதி ஒன்று, செய்வது வேறொன்றா? என தமிழக வெற்றிக் கழக அரசுக்கு டி.டி.வி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: August 10, 2026 at 4:01 pm

சென்னை, ஆக.10, 2026: அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று (திங்கள்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடங்கி நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்வு வரை அனைத்து அறிவிப்புகளுமே விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றும் வேலை – தேர்தல் வாக்குறுதியில் சொல்வது ஒன்று ஆட்சிக்கு வந்த பின்பு செய்வது வேறு என்பதையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “ஏற்கனவே, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை முழுமையாக நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் விவசாயப் பெருமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்திருக்கும் இன்றைய அறிவிப்பு யானைப்பசிக்கு சோளப்பொறியா ? என்று கேட்கும் வகையில் அமைந்திருக்கிறது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 60 வயதுக்குட்பட்ட அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் 2500 ரூபாய், ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள், 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் , வேலை தேடும் பட்டதாரிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் இளைஞர் நல நிதி என தவெக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று கூட நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத நிலையில், 110 விதியின் கீழான முதலமைச்சரின் இன்றைய அரைகுறையான அறிவிப்பு தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது வேறு என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

எனவே, கொடுத்த வாக்குறுதியின் படி நெல் குவிண்டாலுக்கு 3500 ரூபாயாகவும், கரும்பு டன்னுக்கு 4500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிடுவதோடு, தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை அறைகுறையாக அறிவித்து மக்களை ஏமாற்றாமல் முழுமையாக நிறைவேற்றிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்” எனவும் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதைச் சட்டமாக்குக.. கி. வீரமணி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com