K Veeramani: தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதைச் சட்டமாக்குக என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
K Veeramani: தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதைச் சட்டமாக்குக என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

Published on: August 10, 2026 at 3:34 pm
சென்னை, ஆக.10, 2026: தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதைச் சட்டமாக்குக என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இன்றைய காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்திருக்காமல், கண்ணை மூடிக் கொண்டு அவமதித்த காரணத்தால், அதற்குத் தனியாக ஓர் ஆணையே பிறப்பிக்கவேண்டிய அவசியம் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு ஏற்பட்டது. பின்னர், அதை மாநிலப் பாடலாக அறிவித்தும் ஆணையிட்டது தளபதி மு.க.ஸ்டாலினின் தலைமையிலான தி.மு.க. அரசு” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தமிழ்நாட்டிலேயே மூன்றாவது இடத்திற்குத் தள்ளுவது, ஒரு மன்னிக்கப்படக் கூடாத குற்றம். அதை முதலில் பாட வற்புறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் முன்மொழிந்தபோது, ‘‘இதில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். முதலில் தமிழ் மொழி வாழ்த்துப் பாடல் பாடுவதுதான், அரசு நிகழ்ச்சிகளில் நடைமுறையாக இருக்கவேண்டும்! இதற்காக பிரதமருக்கு, இரண்டுமுறை கடிதம் எழுதியுள்ளேன்’’ என்று கூறியிருக்கிறார். வரவேற்கத்தக்கது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதைச் சட்டமாக்குக. அதை அவமதிப்போரைத் தண்டிக்கவும் வகை செய்யவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : தேனி மேகமலைப் பகுதி வாழ் மக்களின் அச்சத்தைப் போக்கிடுக.. தமிழ்நாடு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com