‘வயதல்ல திறமை தான் முக்கியம்’.. வைபவ் சூர்யவன்சி குறித்து பிரெட் லீ!

Brett Lee on Suryavanshi : ” வைபவ் சூர்யவன்சிக்கு 15 வயது மட்டுமே ஆனால் என்ன? ஒருவரின் வயது முக்கியமல்ல திறமை தான் முக்கியம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

Published on: August 9, 2026 at 1:40 pm

சிட்னி ஆகஸ்ட் 9 2026; ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து எழுந்துள்ள விவாதங்களை புறக்கணித்து, “அவர் 15 வயது என்றால் அருமை, 17 அல்லது 18 என்றால் அதுவும் பரவாயில்லை. முக்கியமானது அவர் விளையாடும் திறமை” என்று தெரிவித்துள்ளார்.

வயது விவாதம்

வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2026-இல் 776 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பி வென்றார்.

  • அவர் 15 வயது என்பதில் உலகம் முழுவதும் சந்தேகம் எழுந்தாலும், பிரெட் லீ “ அவர் வயது 15?” என்பது உலகளாவிய பேச்சுப்பொருள் என்றார்.
  • ஆனால், அவர் வயதை விட திறமை மற்றும் ஆட்டம் முக்கியம் என வலியுறுத்தினார்.

IPL மற்றும் சர்வதேச சாதனைகள்

  • IPL 2026-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 29 பந்தில் 97 ரன்கள் அடித்து உலகளாவிய கவனம் பெற்றார்.
  • இந்திய அணிக்காக இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார்; பின்னர் ஜிம்பாப்வே தொடரில், ப்ளேயர் ஆப் சீரிஸ் (தொடர் நாயகன்) விருது பெற்றார். மேலும், ஐபிஎல் -இல் அவர் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையும் படைத்துள்ளார். பிரெட் லீ பாராட்டு

இந்த நிலையில் இவரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ வெகுவாக பாராட்டி உள்ளார்.
இது குறித்து, பிரெட் லீ “இந்த பையனுக்கு கிரிக்கெட் விளையாட தெரியும். இந்தியா மிகப்பெரிய வீரரை கண்டுபிடித்து தேர்ந்தெடுத்துள்ளது” என்று லீ பாராட்டினார்.

மேலும், அவர், சூர்யவன்ஷியின் பேட்டிங் குறித்து பேசுகையில், “அவரின் பேட்டிங் மற்றும் ஃபார்மில் பிரச்சினை இல்லை; மன அழுத்தமே சவால்” என்று எச்சரித்தார். தொடர்ந்து, “அவரை குழந்தையாகவே இருக்க விடுங்கள். அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம்” என்றும் லீ அறிவுறுத்தினார்.

இதற்கிடையில், சூர்யவன்ஷி சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை சமம் செய்ய வாய்ப்புள்ளது எனவும் லீ கூறினார்.

இதையும் படிங்க; கொரியா மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டியில் அஸ்மிதா சாலிஹா! இந்திய வீராங்கனை அசத்தல்

செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.. ஜிசிடி தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேற்றம் Praggnanandhaa Wins

செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.. ஜிசிடி தரவரிசையில்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com