NBFC Gold Loans Surge : வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) தங்க அடமானக் கடன்களில் 2026 ஜூன் மாதத்தில் 69.3% வளர்ச்சி கண்டுள்ளன என தரவுகள் தெரிவிக்கின்றன.
NBFC Gold Loans Surge : வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) தங்க அடமானக் கடன்களில் 2026 ஜூன் மாதத்தில் 69.3% வளர்ச்சி கண்டுள்ளன என தரவுகள் தெரிவிக்கின்றன.

Published on: August 9, 2026 at 1:15 pm
சென்னை ஆகஸ்ட் 9 2026; வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) தங்க அடமானக் கடன்களில் 2026 ஜூன் மாதத்தில் 69.3% வளர்ச்சி கண்டுள்ளன. இது ₹3.41 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேசமயம், தொழில் மற்றும் சேவை துறைகளுக்கான கடன் வளர்ச்சி மந்தமாகியுள்ளது.
தங்க அடமானக் கடன் வளர்ச்சி
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தங்க நகை அடமானக் கடன்கள் ₹3.41 லட்சம் கோடி வரை உயர்ந்துள்ளன. அதாவது, 2025 ஜூனில் 40.6% இருந்த வளர்ச்சி, 2026 ஜூனில் 69.3% ஆக அதிகரித்துள்ளது.
தங்க விலை உயர்வு காரணமாக மக்கள் தங்கள் நகைகளை அடமானம் வைத்து நிதி பெற அதிகம் முனைந்துள்ளனர்.
சில்லறை கடன் விரிவடைவு
இதற்கிடையில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் மொத்த சில்லறை கடன் 20.3% வளர்ச்சி கண்டுள்ளது.
வீட்டு கடன் 11.4% உயர்ந்து ₹8.44 லட்சம் கோடி ஆகவும் வாகனக் கடன் 15.2% உயர்ந்து ₹6.24 லட்சம் கோடி ஆகவும் நுகர்வோர் கடன்கள் 46.8% உயர்ந்து ₹72,201 கோடி ஆகியவை பதிவாகியுள்ளன.
தொழில் மற்றும் வேளாண் கடன் நிலை
வேளாண் மற்றும் தொடர்புடைய துறைகளுக்கான கடன் 17.9% வளர்ச்சி கண்டுள்ளது (2025இல் 5.1%).
ஆனால் தொழில் துறைக்கான கடன் 6.7% மட்டுமே வளர்ந்துள்ளது; 2025இல் இது 10.3% ஆக இருந்தது.
இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறையில் மந்தநிலை காரணமாக தொழில் கடன் வளர்ச்சி குறைந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி விதிமுறைகள் மற்றும் கண்காணிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி 2025இல் தங்கம் மற்றும் வெள்ளிக்கு எதிராக கடன் வழிமுறைகள் என்ற புதிய விதிமுறைகளை வெளியிட்டது.
அதன்படி தங்க அடமானக் கடன்களில் தங்க நகை கடன் மதிப்பு மற்றும் ஏலம் தொடர்பான வெளிப்படை தன்மை போன்ற குறைபாடுகளை சரிசெய்ய இந்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் மொத்த கடன் ₹59.31 லட்சம் கோடி (2025 ஜூனில் ₹51.86 லட்சம் கோடி) ஆக காணப்படுகிறது. மேலும், சில்லறை கடன் விரிவடைவு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், தொழில் மற்றும் சேவை துறைகளில் மந்தநிலை தெளிவாக தெரிகிறது.
தங்க விலை உயர்வு மற்றும் இந்தியா ரிசர்வ் வங்கி விதிமுறைகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் கடன் சந்தையை மாற்றியமைத்துள்ளன.
இதையும் படிங்க; எஸ்.பி.ஐ நிகர லாபம் 11 சதவீதம் அதிகரிப்பு.. என்.பி.ஏ சரிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com