ஓடிடியில் ‘இதயம் முரளி’.. அதர்வாவின் படத்தை எங்கே, எப்போது பார்க்கலாம்?

Idhayam Murali OTT Release: அதர்வா நடிப்பில் வெளியான ‘இதயம் முரளி’ திரைப்படம் ஆகஸ்ட் 7 முதல் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Published on: August 8, 2026 at 5:59 pm

சென்னை, ஆக. 8 2026: அதர்வா நடிப்பில் வெளியான ‘இதயம் முரளி’ திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து, இப்படம் ஆகஸ்ட் 7 முதல் நெட்ஃபிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. தமிழில் உருவாகியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ஓடிடி -யில் கிடைக்கிறது.

‘இதயம் முரளி’ திரைப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி தயாரித்துள்ளார். இளம் வயதில் ஏற்படும் ஒருதலைக் காதலையும், காலம் கடந்த பின்னரும் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் அந்த உணர்வுகளையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டாலும், சில உணர்வுகள் மனதில் தொடர்ந்து நிலைத்திருப்பதை இப்படம் பேசுகிறது.

டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகியுள்ள இப்படத்தில் அதர்வாவுடன் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் ஃபகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மற்றும் சி.எச். சாய் கவனித்துள்ளனர். படத்திற்கு தமன் எஸ். இசையமைத்துள்ளார்.

‘இதயம் முரளி’ திரைப்படம் கடந்த ஜூலை 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு தற்போதுநெட்ஃபிக்ஸில் டிஜிட்டல் பிரீமியர் கண்டுள்ளது. தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, பல மொழி ரசிகர்களும் படத்தை ஓடிடி-யில் காணும் வகையில் 5 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஷால், சூர்யா படங்களுடன் மோதல்.. நயன்தாராவின் ‘Hi’ படத்துக்கு சிக்கலா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com