நடிகர் விஜய்யை எனக்கு பிடிக்கும்; நான் அவரின் தீவிர ரசிகை என நடிகை வனிதா விஜயகுமார் கூறினார்.
நடிகர் விஜய்யை எனக்கு பிடிக்கும்; நான் அவரின் தீவிர ரசிகை என நடிகை வனிதா விஜயகுமார் கூறினார்.
Published on: September 25, 2024 at 10:23 pm
Actor Vijay | நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர், 1995ல் நடிகர் விஜய்க்கு ஜோடியாாக சந்திரலேகா என்ற படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் சிறந்த வெற்றியை பதிவு செய்யவில்லை என்ற போதிலும் விமர்சன ரீதியாக படம் ஓரளவு வெற்றி பெற்றது.
அதன் பின்னர் நடிகர் விஜய், வனிதா ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் வனிதா 2016ல் ராஜ் கிரண் உடன் மாணிக்கம் என்ற படத்தில் நடித்தார். இவர் தெலுங்கில் தேவி என்ற பக்தி படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் பல்வேறு படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இது மட்டுமின்றி இயக்குனர் பி வாசுவிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். எனினும் ஆகாஷ் என்பவருடனான திருமணத்துக்கு பின்னர் இவர் நடிப்பில் இருந்து ஒதுங்கி காணப்பட்டார்.
இந்த நிலையில், 2010க்கு பின்னர் இவர் திரைதுறையில் மறுபிரவேசம் செய்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்து தற்போது இவர் பேசியுள்ளார். அதில், “இந்தி தெரியாது போடாவுக்கும் விஜய்க்கும் சம்பந்தம் கிடையாது. நான் கண்டிப்பாக விஜய்க்குதான் சப்போர்ட் பண்ணுவேன். விஜய் மீதான அந்த பிணைப்பும், அன்பும் எப்போதும் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மனைவியை அந்தரங்கமாக படம் பிடித்த இசையமைப்பாளர்: சென்னை போலீசில் புகார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com